உதயநிதியைக் காண பட்டுக்கோட்டையில் திரண்ட பெருங்கூட்டம்.. என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

Editorial
0

எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பட்டுக்கோட்டையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அதிரை, பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் உதயநிதி பதிவிடுகையில், “ தன்மான இயக்கத்தின் தனிப்பெருஞ் சுடர் அஞ்சாநெஞ்சன்  பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகே, பட்டுக்கோட்டை வெற்றி வேட்பாளர் அண்ணன் அண்ணாதுரை அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம். 

டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டில் Remote Control-ஆட்சி நடத்த நினைக்கும் ஆதிக்கவாதிகளுக்கு சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டில் இடமில்லை என உரையாற்றினோம். 

மே-4 அன்று தமிழ்நாடெங்கும் 200-க்கும் அதிகமான இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்ல உறுதியேற்றோம்!” என்று குறிப்பிட்டுள்ளார். 





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...