பட்டுக்கோட்டை, 6 ஏப்ரல் 2024
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ., தீவிர இந்துத்துவ கொள்கைகளைக் கொண்ட 'காவி புலிப்படை' என்ற அமைப்பின் ஆதரவை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பட்டுக்கோட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ.-வை, காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் அண்மையில் நேரில் சந்தித்தார். அப்போது அவர், வேட்பாளர் அண்ணாதுரைக்கு தங்கள் அமைப்பின் முழு ஆதரவைத் தெரிவித்தார். முன்னதாக இவர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியையும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, இந்த கூட்டணி குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தி.மு.க. தனது கொள்கைகளில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கொள்கை முரண்பாடு கொண்ட கட்சிகளுடனும், அமைப்புகளுடனும் கைகோர்ப்பதாகவும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். பெரியார் கொள்கைகளை பேசும் தி.மு.க., தீவிர இந்துத்துவ கொள்கையுடைய அமைப்புகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வது ஏமாற்றும் செயலாகும்.
காவி புலிப்படை என்பது தீவிரமான இந்துத்துவக் கொள்கைகளை முன்னிறுத்தும் ஒரு வலதுசாரி அமைப்பாகும். குறிப்பாக, தி.மு.க. மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக விமர்சிப்பதோடு, பல்வேறு சந்தர்ப்பங்களில் தி.மு.க. தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்து, அக்கட்சிக்கு எதிராக தொடர் கண்டனங்களை பதிவு செய்து வரும் அமைப்பு இதுவாகும்.
ஆதாரம்: https://youtu.be/o25y8wtO37M?si=VNl8ilMvzGak2F9i
தங்களை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக எதிர்க்கும் ஒரு தீவிர இந்துத்துவ அமைப்பின் ஆதரவை, தி.மு.க. வேட்பாளர் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டிருப்பது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டையும், சந்தர்ப்பவாத அரசியலையும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.
