அதிராம்பட்டினம் பகுதியில் ஈச்சர் லாரி மோதிய கோர விபற்றில், இருசக்கர வாகன ஓட்டி தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் அருகே உள்ள பிஸ்மி மெடிக்கல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது, எதிர்பாராத விதமாக வந்த ஈச்சர் லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உயிருக்கு போராடிய அவரை மீட்கும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
