சென்னையில் அதிரை மாணவர்களுக்காக சிஸ்கா- FEED இணைந்து நடந்தும் கவுன்சிலிங்

Editorial
0





சென்னை: மாணவ, மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தும் ஃபீட் மற்றும் சிஸ்கா அமைப்புகள்.

சென்னை: சமீபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை முடித்த மாணவ, மாணவியர்களுக்காக, ஃபீட் அசோசியேஷன் சென்னை (Feed Association) மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்கம் சென்னை அசோசியேஷன் (SISCA) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த வார இறுதியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்த உள்ளன.


மாணவர்கள் மேற்படிப்பிற்கு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதைத் தீர்மானிக்க உதவும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், மே 9 சனிக்கிழமை மற்றும் மே 10 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் தனிப்பட்ட முறையிலான ஆலோசனைகள் (One-to-One Counselling) வழங்கப்படும். அண்ணா சாலை, மக்கா மஸ்ஜித் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீட் அசோசியேஷன் அலுவலகத்தில் இரு தினங்களும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அமர்வுகள் நடைபெறும்.


சிறந்த கல்வியாளர்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் நேரில் கலந்து கொண்டு, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த சிறப்பான ஆலோசனைகளை வழங்குவதோடு, மாணவர்களின் சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கங்களை அளிக்க உள்ளனர். மாணவர்கள் தங்களது பெற்றோருடன் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...