அதிரை திமுகவில் யார் அந்த கருப்பு ஆடு? "அண்ணாதுரைக்கு எதிராகச் சதியா? சாட்டை துரைமுருகன் பேச்சால் பரபரப்பு!

Editorial
0

 


அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், சாட்டை துரைமுருகன் பேசிய கருத்துகள் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. பட்டுக்கோட்டை தொகுதியில் அண்ணாதுரை மட்டும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என அதிரை திமுகவினரே தன்னிடம் ரகசியமாகத் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தல் பரப்புரை மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய சாட்டை துரைமுருகன் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "பட்டுக்கோட்டை தொகுதியில் அண்ணாதுரை மட்டும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த திமுகவினரே என்னிடம் ரகசியமாகத் தெரிவித்தனர்" எனப் பகிரங்கமாகக் குறிப்பிட்டார். இவரது இந்தப் பேச்சு கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே அதிராம்பட்டினம் திமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் மற்றும் கோஷ்டி மோதல்கள் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், சாட்டை துரைமுருகனின் இந்த கருத்து அந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் அமைந்துள்ளது.

"உண்மையிலேயே சாட்டை துரைமுருகனிடம் அவ்வாறு ரகசியம் பேசியது யார்?" என்ற கேள்வி தற்போது அதிரை திமுக தொண்டர்கள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பரவலாக எழுந்துள்ளது. இது தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...