போர் காரணமாக ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாட்டால் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை, “சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவிற்கான காலக்கெடு நகர்ப்புறங்களில் 25 நாட்கள் என்றும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் என்றும் (இணைப்பு வகை எதுவாக இருப்பினும்“ அறிவித்தது.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் 25 நாட்கள் கழித்து முன்பதிவு செய்யும்போது முன்பதிவாகவில்லை என்று தெரிவிக்கின்றனர். இது குறித்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பாலு இண்டேன் கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தபோது 45 நாட்களாகும் என்கின்றனர். அது கிராம பகுதிகளுக்குதானே.. அதிராம்பட்டினம் நகராட்சிக்குமா என்று வினவியபோது எல்லோருக்கும் இதுதான் என்கின்றனர்.
ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு முரணாக நடைபெறும் இப்பணிகளால் வீடுகளில் கேஸ் காலியாகி செய்வதறியாமல் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
