Advertisement:
அதிரையின் முக்கிய நீர் வழித்தடமான CMP வாய்க்கால் வழியாக பெரும்பாலான குளங்கள் ஆற்று நீர் கொண்டு நிரப்பப்படுவது வழக்கம். அனால், இந்த CMP வாய்க்கால் பல வருடங்களாக அரசால் தூர்வாரப்படாமல் உள்ளது.
இதனால் நீர் செல்லும் பாதை குப்பைகளாலும் கழிவுநீராலும் நிரம்பி பயன்படுத்த முடியாத வகையில் இருந்து வருகிறது. இதனை தூர்வாரி இருபுறமும் கரை மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்துத் தர வேண்டும் என்பது அதிரை மக்களின் பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இப்படி திறக்கப்படும் தண்ணீர் சில நாட்களில் காவிரி கடைமடை பகுதியான அதிரைக்கு வந்தடையும். ஆனால், இந்த வாய்க்காலுக்கு ஆற்று நீரும் வரவில்லை.
நீர் வந்தாலும் சாக்கடை நீருடன் ஒன்றாகக் கலந்து குளங்களுக்குச் செல்லும் அவல நிலையே உள்ளது. இதனால் பொதுமக்களின் சுகாதாரமும், நீர்நிலைகளின் தூய்மையும் பாதிக்கப்படுகின்றன. அப்பகுதி குப்பை மேடாக மாறி மக்கள் கொசுத் தொல்லையால் அவதியுறுகின்றனர்.
எனவே, சி.எம்.பி. வாய்க்காலை முழுமையாகச் சீரமைத்து, சாக்கடை நீர் கலக்காமல் தூய்மையான ஆற்று நீர் குளங்களைச் சென்றடைய முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளும் வகையில் இ மெயில் மனு தயாரிக்கப்பட்டு ஒரே கிளிக்கில் அனுப்பும் வசதி அதிரை பிறையால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் ஒரே கிளிக்கில் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர், RDMA நகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கலாம். அதன்படி கீழே உள்ள SUBMIT என்ற சிவப்பு வண்ண பட்டனை கிளிக் செய்யவும். உடனே உங்கள் மெயில் APP அல்லது BROWSER பக்கம் திறக்கும். அதில் SEND பட்டனை அழுத்தினால் மட்டும் போதும். உங்கள் கருத்துக்கள் முதலமைச்சருக்குச் சென்றடைந்து விடும்.
Advertisement:



