
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு பணிகளுக்காக ரூ.5000 வரை லஞ்சம் கேட்கப்படுவதாக அதிராம்பட்டினம் பத்திர எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தச் செயலைக் கண்டித்து, வரும் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு வார வேலை நாட்களுக்கு எந்தவொரு பத்திரப்பதிவு பணிகளிலும் ஈடுபடப் போவதில்லை என அதிராம்பட்டினம் பத்திர எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகமும் லஞ்ச ஒழிப்புத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தத் திடீர் புறக்கணிப்பு அறிவிப்பால், அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த வாரம் பத்திரப்பதிவு செய்யக் காத்திருக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அறிவிப்பு காணொளி -
