அதிரை ஆனைவிழுந்தான் குளம் தூர்வாரும் பணி - தொடரும் மர்மம்! அதிரை பிறையின் அடுக்கடுக்கான கேள்விகள்

Editorial
0


Ad:


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் உள்ள சேர்மான்வாடி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆனைவிழுந்தான் குளம், பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் மேகா பவுண்டேஷன், நிமல் ராகவன், உறவுகள் டிரஸ்ட் மற்றும் யான் அறக்கட்டளை இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் தூர்வாரும் பணியைத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்தப் பணிக்கு அனுமதி எந்த அதிகாரியிடமிருந்து பெறப்பட்டது? அந்த அனுமதி எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது? அது தொடர்பான ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்படுமா?

ஈரோட்டைச் சேர்ந்த யான் அறக்கட்டளை இந்தத் திட்டத்தில் இணைந்ததன் பின்னணி என்ன? குளத்துடன் அந்த அமைப்புக்கு என்ன தொடர்பு? “வீதி லீடர்ஸ்” அமைப்புடன் அதற்கு உள்ள தொடர்பு என்ன என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

அதேபோல், நிமல் ராகவனின் பங்கு என்ன? அவருக்கும் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமானவர் எனக் கூறப்படும் ஜான் ரவிக்கும் உள்ள தொடர்பு என்ன? இருவரும் இணைந்து செயல்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தன்மை என்ன என்பதும் கேள்வியாக உள்ளது.

மேலும், பணிகள் நிறைவடைந்த பிறகு குளம் யாரிடம் ஒப்படைக்கப்படும்? அதன் பராமரிப்பு யாருடைய பொறுப்பில் இருக்கும்?

இந்தக் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைப்புகளும், பணியை முன்னெடுத்தவர்களும் தெளிவான விளக்கம் அளிப்பார்களா என்பதே தற்போது எழும் முக்கியமான கேள்வியாக உள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...