பட்டுக்கோட்டையில் அண்ணாதுரைக்கு உள்குத்தா? சுயேச்சையாக அதிரை வாக்குகளைப் பிரிக்கும் திமுக கவுன்சிலர்

Editorial
0



 

அதிராம்பட்டினம்: பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.எல்.ஏ அண்ணாதுரைக்கு எதிராக, அதிராம்பட்டினம் நகராட்சி திமுக கவுன்சிலர் சரீப் சுயேச்சையாகப் போட்டியிடுவது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களமிறங்கியுள்ள போதிலும், சரீப் மீது திமுக தலைமை இதுவரை எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதன் பின்னணியில் அதிரை திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசலே பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறது. சுயேச்சையாகக் களமிறங்கியுள்ள சரீப், நகராட்சி துணைத் தலைவர் ராம. குணசேகரனின் ஆதரவாளராக அறியப்படுகிறார். மறுபுறம், முன்னாள் சேர்மன் அஸ்லம் எம்.எல்.ஏ அண்ணாதுரையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். இதன் காரணமாக, அண்ணாதுரையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடும் வியூகத்துடனேயே குணசேகரன் தரப்பு சரீப்பை களமிறக்கியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



சமீபத்தில் அண்ணாதுரையிடமிருந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், தற்போதைய மாவட்டச் செயலாளரிடம் கவுன்சிலர் சரீப்புக்கு எதிராகப் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, அண்ணாதுரையின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.




Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...