Ads: Crescent builders - Coming Soon

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் இன்று அதிரை கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள ஹவான் உணவகம் அருகே இரண்டு பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜாமடத்தை சேர்ந்த நபர் ஒரு பைக்கிலும் அதிரையை சேர்ந்த சிறுவன் ஒரு பைக்கிலும் சென்று கொண்டிருந்தபோது இருவரும் மோதிக் கொண்டுள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
