Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

'இஸ்லாமியருக்கும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் பொருந்தும்!'இஸ்லாமியருக்கும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்துல் காதர் என்பவரின் 18 வயதிற்கு கீழ் உள்ள மகளுக்கு திருமணம் செய்ய பெரம்பலூர் நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்துல் காதர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'நாங்கள் இஸ்லாமியர்கள். எனவே, எங்களுக்கு குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பொருந்தாது' எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, "குழந்தை திருமண தடுப்புச் சட்டம், மதபேதமின்றி அனைவருக்கும் பொருந்தும். குழந்தைகள் நலன் மற்றும் அவர்களின் முன்னேற்றமே முக்கியம். எனவே, இஸ்லாமியர் மட்டுமின்றி அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும்" எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

0 உங்கள் குரல்

DR.PIRAI-பனங்கருப்பட்டி நோய்களுக்கு நோ சொல்லும் கருப்பு நண்பன்!இந்தியாவில் வேறெந்த மாநிலங்களை விடவும் பனைமரங்கள் தமிழகத்தில் மிகுதி. இதன் தேவை இன்றி யமையாததாகவே இருக்கிறது. பனையின் பயன்பாடு ஓலை, நுங்கு, பதனீர், பனைவெல்லம் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவற்றில் முக்கிய பங்கு கருப்பட்டிக்கு உண்டு.

சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன்.பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.

பனங்கருப்பட்டியில் மருத்துவ பயன்கள் சர்க்கரையை விட பல நூறு மடங்கு மிகுதியாக இருக்கின்றன என்றாலும், அதனை நாடுபவர்கள் குறைவே. ஆனால், வெள்ளை சர்க்கரையை சாப்பிடும்போது, எவ்வித சத்தும் இல்லாத வெள்ளை சர்க்கரையை ஜீரணிக்கவே உடலில் ஏற்கனவே உள்ள விட்டமின் பி,கால்சியம் போன்ற சத்துக்கள் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து சர்க்கரை உண்பதால் ஈரலில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டு, ஈரலில் கொழுப்பு தேங்கி, அது 'இன்சுலின்' சுரப்பில் பாதித்து "சர்க்கரை நோய்"க்கு வழிவகுக்கிறது. 

அதேநேரம், சர்க்கரை உற்பத்தியின் போது கலக்கப்படும் பல்வேறு கெமிக்கல்கள், இதய நோயின் தாக் கத்தை அதிகரிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும், கேன்சர், கர்ப்பப்பை, கிட்னி, கணையம் என உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல்  கிளீன் போல்ட் ஆக்கி விடுகிறது. இதற்கும் மேலாக இந்த கெமிக்கல்கள் நம் மூளையை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. நம் மரபணுவையும் பாதித்து அடுத்த தலைமுறையை இயற்கையிலேயே நோயுடைய தலைமுறையாக்குகிறது. இது மட்டுமா இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல.

இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி. சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.

"உணவே மருந்து" என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது. 

பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள 'கிளைசீமி இன்டெக்ஸ்' உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர். வண்டியில் செல்பவர்கள் கூட பனங்கருப்பட்டியைப் பார்த்ததும் திரும்பி வந்து வாங்கி செல்வார்கள். கருப்பட்டியில் இல்லாத பயன்களே இல்லை. பலர் அதன் சிறப்பை உணரவில்லை'  என்கிறார் பனங்கருப்பட்டி வியாபாரி ஒருவர்.

பழந்தமிழர் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த கருப்பட்டி இன்று தமிழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டு வருகிறது என்பது கசக்கும் உண்மைதான்.

0 உங்கள் குரல்

துபாயில் உயிரிழந்த தமிழர் உடல் ஈமான் சங்க உதவியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது!


துபாய்க்கு வேலை தேடி வந்த இடத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்த தமிழக நபரின் உடல் துபாய் ஈமான் அமைப்பின் முயற்சியால் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காளியப்பா நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (47). அவர் துபாயில் உள்ள டயர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி சொந்த ஊருக்கு சென்றார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது.

 பொருளாதாரத் தேவையின் காரணமாக அவர் மீண்டும் துபாய்க்கு வேலைக்கு வர முயற்சி செய்தார். பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியும், எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே நண்பர்களின் உதவியுடன் 3 மாத விசிட் விசாவில் துபாய்க்கு டிசம்பர் 17ம் தேதி வந்தார். 

துபாய் ரசிதியா பகுதியில் உள்ள நண்பர்களின் அறையில் தங்கி வேலை தேடி வந்தார்.

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான மருந்துகளை கொண்டு வந்து சாப்பிட்டும் வந்தார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு காலை வேளையில் கழிப்பறைக்கு சென்றார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. அறையில் தங்கியிருக்கும் மற்ற நண்பர்கள் வேலைக்குச் செல்ல தயாராவதற்கு காத்திருந்தனர். சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு அவர் மயக்கமடைந்து கிடந்தார். 

உடனே அந்த அறையைச் சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் கழிப்பறை கதவை உடைத்து மயங்கிக் கிடந்த குருமூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துபாய் ராஷித் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ரத்த அழுத்தம் அதிகமாகி அவரது மண்டையில் உள்ள ரத்தக்குழாய் உடைப்பு ஏற்பட்டு தலை முழுவதும் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இதனால் அவர் மயக்க மருந்து கொடுத்து மயக்க நிலையில் வைக்கப்பட்டார். 

அவர் சுவாசிக்க மெஷின் உதவி செய்யப்பட்டு வந்தது. மேலும் உணவு உட்கொள்ள, சுவாசிக்க தொண்டையில் ஒரு சிறிய துளை போடப்பட்டது. அவரது உடல் நிலை சீராக 10 நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் 26.02.2015 அன்று இரவு மரணமடைந்தார். இந்த தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். 

இதற்கிடையே அவரது குடும்பத்தினர் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க துபாய் ஈமான் கல்சுரல் சென்டரை நாடினர். துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி வழிகாட்டுதலில் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோரின் முயற்சியால் அவரின் உடல் விமானம் மூலம் இன்று தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
0 உங்கள் குரல்

அதிரையில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!நாளை முதல் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கயிருப்பதால் வெள்ளிக்கிழமை அன்று தரகர் தெரு முகைதீன் பள்ளியில் ஜும்ஆ தொழுகை மாணவர்களின் நலன் கருதி பகல் 1:30pm மணிக்கு நடைபெறும்.எனவே இதனை மாணவர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

0 உங்கள் குரல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உண்மையான ஹீரோ!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலக்கி வரும் சாகித் அப்ரிடியோ அல்லது மிஸ்பா உல் ஹக்கோ பாகிஸ்தான் அணியின் ஹீரோக்களாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை தயவு செய்து மாற்றி விடுங்கள். உண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிஜ ஹீரோ அந்த நாட்டின் மாற்றுத்திறனாளி அணியில்தான் உள்ளார்.

ஃ பாரா சயீத்... இந்த பெயரை கேட்டாலயே பேட்ஸ்மேன்கள் அலறுகின்றனர். ஒரு காலில்லாத நிலையில் மின்னல் வேகத்தில் வந்து அதிர அதிர பந்து வீசும் ஃபாரா சயீத்தின் பந்துவீச்சு அப்படியே பழைய சோகைப் அக்தரை நினைவுபடுத்துகிறது. பந்தை தொட்டால் 'அவுட்' தொடவிட்டால் ஸ்டம்ப் எகிறும்... அந்த அளவுக்கு துல்லியம். ஃபாரா சயீத்துக்கு 2 வயதாக இருந்தபோது போலியோ தாக்கியதில் இடது கால் செயல் இழந்து விட்டது. 

சிறு வயது முதலே ஃபாரா சயீத்துக்கு கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பதுதான் கனவு. அதற்காக கடினமாக உழைத்தார். இன்று பாகிஸ்தான் மக்களின் ஹீரோ ஆகி விட்டார். ஒரு கால் இல்லாத நிலையிலும் சாதாரண வேகப் பந்துவீச்சாளர் போல ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்துவீசுவதுதான் பாரா சயீத்தின் ஸ்பெஷல்.

ஃபாரா சயீத்தின் வேகப்பந்து வீச்சை பாகிஸ்தான் அணியின் முதல் தர கிரிக்கெட் வீரர்கள் கூட எதிர்கொள்ள திணறியிருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் ஃபாரா சயீத்தை மிகச்சிறந்த பந்துவீச்சாளராக பார்க்க வேண்டுமென்ற ஆசையும் இருந்தது. இதற்காக பல பந்துவீச்சாளர்களிடம் அவரை பயிற்சி பெற வைத்தனர். இதன் விளைவாக ஃபரா சயீத்தின் பந்துவீச்சு மெருகேறி இன்று பாகிஸ்தான் மாற்றுத்திறனாளிகள் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக அவரை மாற்றியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் மாற்றுத்திறனாளிகள் அணி சர்வதேச போட்டிகளில் பஙகேற்ற போது, ஃபாரா சயீத் பந்துவீசுவதை நேரில் கண்ட முன்னாள் ஐ.சி.சி. தலைவர் ஹாரூன் லோர்கத், ''ஃபாரா சயீத்தின் பந்துவீச்சை நேரில் கண்டதுதான் நான் ஐ.சி.சி. தலைவராக இருந்து சாதித்தது. வேறு எதுவும் நான் செய்யவில்லை'' என்று மனம் திறந்து பாராட்டினார்.

ஃபாரா சயீத் தனது பந்து வீச்சு குறித்து கூறுகையில், ''தொடக்கத்தில் தெருவில் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவேன். அவர்கள் எனது பந்துவீச்சை எதிர்கொள்ள தயங்குவார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தளவுக்கா நாம பந்துவீசுகிறோம் என்று மனதில் எண்ணிக்கொள்வேன். இதுவே நாளைடைவில் சிறந்த பந்துவீச்சாளராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எனது மனதிற்குள் விதைத்தது. தீவிர பயிற்சி செய்தேன்" என்றார்.

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் அடி வாங்கினாலும்... ஃபாரா சயீத் போன்ற வீரர்களை உருவாக்கியுள்ளதற்காக தாராளமாக காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

0 உங்கள் குரல்

தஞ்சையில் நடைபெற்ற TNCA தொடரில் கால் இறுதிக்கு முன்னேறி அசத்திய அதிரை AFCC!


தஞ்சாவூரில் TNCA லீக் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் தஞ்சாவூர் மாவட்ட சேர்ந்த 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் தலை சிறந்த 20 அணிகள் பங்கேற்று விளையாடும் இத்தொடர் போட்டி தஞ்சை பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றில் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு ஐந்து அணிகள் விளையாடும். ஒரு அணிக்கு 4 போட்டிகலும் அதில் ஒரு பிரிவில் அதிக புள்ளிகள் பெரும் இரண்டு அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.

அந்த வகையில் அதிரை AFCC அணி கால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இத்தொடரில் வெற்றி பெற்றால் நமதூர் AFCC அணி TNCA தஞ்சை மாவட்ட சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும்.

இவர்கள் இத்தொடரில் வெற்றிபெற வாழ்த்துகிறது அதிரை பிறை.

0 உங்கள் குரல்

தஞ்சாவூரில் த.மு.மு.க வின் 119 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா!0 உங்கள் குரல்

இஸ்லாம்

கட்டுரை

விளையாட்டு

தொழில்நுட்பம்

முக்கிய தகவல்கள்

வேலைவாய்ப்பு